[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

பிருத்வி சதம், மயங்க் இரட்டை சதம்: மிரட்டும் இந்திய ஏ அணி!

agarwal-220-shaw-136-bury-south-africa-a

தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணியுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.

(மயங்க் அகர்வால்)

அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியின் ருடி செகண்ட், அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக் கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி, 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர் வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர் வால் 250 பந்துகளை சந்தித்து 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருக்கிறார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்த நிலை யில் களத்தில் உள்ளார். மூன்றாவது நாள் இன்று ஆட்டம் நடக்கிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close