[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

வெளிநாட்டில் இப்போது எந்த அணியும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை: ரவி சாஸ்திரி

we-believe-we-can-be-one-of-the-best-travelling-teams-ravi-shastri

இன்றைய சூழலில், வெளிநாட்டு மண்ணில் எந்த அணியும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணி யின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்தப் போட்டி பற்றி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். டெஸ்ட் தொடரை பொறுத் தவரை தென்னாப்பிரிக்க மண்ணில் நன்றாகவே செயல்பட்டோம். முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஜோகன் னஸ்பர்க்கில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றோம். அந்த உத்வேகத்தை இங்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். எங்களுக்கான சவால் என்னவென்றால், வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுதான்.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்க முடியும். அதற்கான திறமை இருக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் வெளிநாட்டு மண்ணில் எந்த அணியும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இலங்கை வந்த தென்னாப் பிரிக்க அணி, டெஸ்ட் தொடரில் விளையாடிபோது என்ன நடந்தது என்பதைப் பார்த்திருக்கலாம். 

2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற போது 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தோம். 2014-ம் ஆண்டு 3-1 என்ற கணக்கில் இழந்தோம். இந்த முறை அதை விட சிறப்பாக ஆடி வெற்றி பெற முடிவு செய்துள்ளோம். எந்த மாதிரியான சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. டெஸ்ட் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த பந்துவீச்சு எங்களிடம் இருக் கிறது.  நாங்கள் எங்கள் திட்டத்தை சரியாக வெளிப்படுத்த நினைக்கிறோம். அதே போல் எங்களின் பேட்டிங் வரிசையும் சிறப்பாக இருக்கிற து.  அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் பலர் இங்கிலாந்தில் விளையாடி நிறைய கற்று இருக்கிறார்கள். இதை சாதகமான அம்சமாக பார்க்கிறோம்.

இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் பந்துவீச்சு பற்றி கேட்கிறார்கள். எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் போது முதல் 20 முதல் 25 ஓவர்கள் மிகவும் முக்கியம். அதை சமாளித்து விட்டால் பிறகு வலுவான அடித்தளம் அமைத்து விடலாம்.  இந்த தொடருக்காக, 3-வது தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுலை தேர்வு செய்துள்ளோம். எங்களது பேட்டிங் வரிசை, மாற்றத்துக்கு ஏற்ப இருக்கக் கூடியதுதான். 3-வது தொடக்க ஆட்டக்காரர், முதல் நான்கு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் இறங்கி ஆடலாம். புஜாராவின் ஃபார்ம் பற்றி கேட்கிறார் கள். அவர் அனுபவமிக்க வீரர்.

அவர் 60-70 ரன்கள் வரை நிலைத்து நின்று எடுத்தால் அதன்பிறகு அவர் ஆட்டம் வேறு மாதிரி போகும். அவர் அதிக நேரம் மைதானத்தில் நிலைத்து நிற்க வேண்டும். அவர் தூண் போன்றவர். சுழல் பந்துவீச்சில் அஸ்வின் அனுபவ வீரர். அவரது ரெக்கார்ட் சிறப்பானது. அதே போல தான் ஜடேஜாவும். குல்தீப் யாதவும் நன்றாக பந்துவீசக் கூடியவர். பிட்சை பொறுத்து ஒரு சுழல் பந்துவீச்சாளரை தேர்வு செய்வதா, இரண்டு பேரை தேர்வு செய்வதா என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு கூறியுள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close