[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

’எங்க ஊருக்கு வரட்டும்’: கோலிக்கு சவால் விடும் ஆஸி. வீரர்!

cummins-makes-brave-bold-kohli-prediction

’இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு கடும் சவாலை கொடுப்போம்’ என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலி யா செல்கிறது. அங்கு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் அங்கு வரும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்போம் என்று வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

அவர் கூறும்போது, ’எனது துணிச்சலான கணிப்பு என்னவென்றால், ஆஸ்திரேலியா வரும் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை ஒரு சதம் கூட அடிக்கவிடாமல் பார்த்துக்கொள்வோம். அதோடு அந்த அணியையும் விழ்த்துவோம்’ எனத் தெரிவித்தார்.

அந்த அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் கூறும்போது, ’ கோலிக்கு ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் அதிகமான அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த டெஸ்ட் தொடர் சவாலானதாகவும் சுவாரஸ்யமானதாகவும் அமையும்.

மற்ற வீரர்களைக் காட்டிலும் கோலி கொஞ்சம் ஆக்ரோஷமாகவே களத்தில் இருப்பார். ஆதலால், அவரை சரியாகத் திட்டமிட்டு சமாளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோலி 62 ரன்கள் சராசரி வைத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 5 சதங்கள் அடித்துள்ளார் கோலி.

 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close