[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

பிரான்ஸா, பெல்ஜியமா ? இறுதிக்கு முந்தப்போவது யார் ?

france-v-belgium-world-cup-semi-final-european-battle-of-world-stars

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை ஜூன் 14 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 நாடுகள் பங்கேற்ற போட்டியில் 16 நாடுகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதில் 8 அணிகள் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி, பின்பு பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றன.

காலிறுதியில் பிரான்ஸ் அணி உருகுவேயையும், பெல்ஜியம் பிரேஸில் அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறின. கடந்த 1986 ஆம் ஆண்டு மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம் 2-4 என பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. இப்போது இரண்டாவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதிக்கு பெல்ஜியம் முன்னேறியுள்ளது. இளம் வீரர்கள் அதிகம் கொண்டுள்ள அணியாக பிரான்ஸ் இருக்கிறது. அந்த அணியில் 19 வயதேயான மாப்பே, பவேர்ட், லுகாஸ் ஆகியோர் பிரான்ஸின் பிரதான அஸ்திரமாக பார்க்கப்படுகிறார்கள். 

அதேபோல ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் அணி மிகப் பெரிய ஸ்டார்களை கொண்ட அணி அல்ல. ஆனால் மிகவும் திறமை வாய்ந்த அணியாக அது பார்க்கப்படுகிறது. ராபர்ட்டோ மார்டினெஸ் தலைமையில் பெல்ஜிய அணி உலகக் கோப்பையை எவ்வாறு எதிர்கொள்ளும் என சந்தேகம் எழுந்த நிலையில்  அந்த அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

பெல்ஜிய கோல்கீப்பர் திபாட் கோர்டோய்ஸ் மிகத் திறமையாக செயல்படக் கூடியவர். இரு அணிகளும் சம பலத்துடன் உள்ளதால், இன்றையப் போட்டியிவ் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close