[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்: ஐசிசி புது முடிவு

icc-increases-ban-for-players-found-guilty-of-ball-tampering

ஜென்டில்மேன் விளையாட்டில் இதெல்லாம் சஜகம் என்ற விட்டுவைத்திருந்த, வீரர்களை திட்டுவது உள்ளிட்ட பிரச்னைகள் சீரியஸ் ஆகியிருக்கிறது இப்போது! வீரர்களை சீண்டி, அவர்களைக் கோபப்படுத்தி விக்கெட் வீழ்த்துவது வெளிநாட்டு வீரர்களுக்கு கை வந்த கலை. குறிப்பாக, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க முன்னாள் பந்துவீச்சாளர்கள் இதையே வேலையாகச் செய்துவந்தார்கள். 

அடுத்து, பந்தைச் சேதப்படுத்துவது. இதை, இவர்தான் செய்கிறார் என்று குறிப்பிட்ட ஒருவரை மட்டும் கைநீட்ட முடியாது. பெரும்பாலான வீரர்கள் இதை தெரியாமல், தெரிந்தே செய்து வந்தனர். இப்போது கொஞ்சம் குறைந்திருக்கிறது. காரணம் டெக்னாலஜி. துல்லியமான கேமரா வந்த பிறகு வீரர்களின் ஒவ்வொரு அசைவும் தெரிந்துவிடுகிறது, தெளிவாக. அப்படியிருந்தும் தென்னாப்பிரிக்கத் தொடரில் பந்தை சேதப்படுத்தினார்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். அந்தப் பஞ்சாயத்து ஓய்வதற்குள் இலங்கை கிரிக்கெட் கேப்டன் தினேஷ் சண்டிமால் சிக்கினார், வெஸ்ட் இண்டீஸில்!

இதற்கான தண்டனை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலித்து வந்தது. இதனால் அனில் கும்ப்ளே தலைமையினான ஒரு குழுவை அமைத்தது, ஐசிசி. அந்த குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில் தண்டனைகள் கடுமையாக்கப்பட்டிருக்கிறது.
டப்ளினில் நடந்த ஐசிசியின் வருடாந்தர கூட்டத்தில் தண்டனைகளைத் திருத்தி முடிவெடுத்திருக்கிறார்கள்.

எதிரணி வீரரை திட்டுவது 2 மற்றும் 3ஆம் நிலை குற்றம். ஏமாற்றுதல், பந்தை சேதப்படுத்துதல் 2 மற்றும் 3ஆம் நிலைக் குற்றம். தனிப்பட்ட முறையில் சீண்டுவது 2 மற்றும் 3ஆம் நிலை குற்றம். ஆபாசமாகத் திட்டுவதும் நடுவர் முடிவை அவமதிப்பதும் முதல் நிலை குற்றம். இவை புதிய குற்றங்களாகச் சேர்க்கப்பட்டுள்ளன. 

பந்தின் தன்மையை மாற்றுவது இரண்டாம் நிலை குற்றமாக இருந்தது. இப்போது 3 ஆம் நிலைக் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்தை செய்தால், 6 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும்.

அதோடு வீரர்களுக்கான அப்பீலுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அப்பீல் சாதகமாக முடிந்தால் மட்டுமே அந்த தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close