[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

ரசிகர்களை ஏமாற்றிய நெய்மர்: சுவிஸ் அணியுடன் டிரா கண்டது பிரேசில்

world-cup-2018-brazil-vs-switzerland-lacklustre-brazil-held-to-a-1-1-draw-against-switzerland

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் - சுவிட்சர்லாந்து அணிகள் இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.

ராஸ்டோவ் மைதானத்தில் நடந்த போட்டியில், 20 ஆவது நிமிடத்தில் பிலீப் கொட்டினியோ கோல் அடித்து பிரேசில் அணியை முன்னிலை பெறச் செய்தார். இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய 5ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் அடித்தது. கார்னர் வாய்ப்பில் சுவிட்லாந்தின் ஷாக்ரி, தூக்கியடித்த பந்தை, ஸ்டீவன் ஷுபர் நேர்த்தியாக கோலாக்கினார். 

வெற்றிக்கான இரண்டாவது கோலை அடிக்க பிரேசில் அணியினர் மேற்கொண்ட தாக்குதல் ஆட்டத்தை, சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் முறியடித்தனர். முடிவில் ஒன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மர் கோல் அடிக்காமல் இருந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

இதனையெடுத்து நடந்த மற்றொரு போட்டியில் கோஸ்டாரிகா அணி, செர்பிய அணி வெற்றி பெற்றது. ரஷ்யாவில் சமரா‌ நகரில் நடைபெற்ற போட்டியில் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 56ஆவது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அலெக்சாண்டர் கொலரோவ் இடது காலால் இலகுவாக கோல் அடித்தார். இதன்பின்னர் சமன் செய்ய கோஸ்டா ரிகா அணி எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் செர்பிய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close