[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிரான முடிவை அதிமுக எடுத்துள்ளது - அதிமுக-பாமக கூட்டணி குறித்து திருமாவளவன்

பொல்லார்ட் இப்போதும் மேட்ச் வின்னர்தான்: ரோகித் சர்மா

pollard-still-be-a-match-winner-rohit-sharma

'ஆல்ரவுண்டர் பொல்லார்ட் இப்போதும் மேட்ச் வின்னர்தான். அவரை முழுவதுமாக அணியில் இருந்து ஒதுக்க முடியாது’ என மும்பை இண்டியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறினார்.

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்றிரவு மோதின. புனேயில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணியில், ராயுடு 46 ரன்களும் சுரேஷ் ரெய்னா 75 ரன்களும் எடுத்தனர். 

பின்னர் களமிறங்கிய மும்பை அணி, 19.4 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 44 ரன்களும் கேப்டன் ரோகித் சர்மா 56 ரன்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருது ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. 

பின்னர் பேசிய ரோகித் சர்மா, ’மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றி எங்களுக்குத் தேவையான ஒன்று. சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி தவிர மற்றப் போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இருந்தும் வெற்றி பெறவில்லை. இனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அதற்கு இந்தப் போட்டி உத்வேகமாக அமைந்திருக்கிறது. பந்துவீச்சில் சிறப்பாக உள்ள சன் ரைசர்ஸ் அணி, குறைந்த ஸ்கோரை எடுத்து கூட வென்றிருக்கிறது. கேப்டனாக நானும் எனது அணியின் பலம் எது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன்படி இப்போது திரும்பி வந்திருக்கிறோம். இந்தப் போட்டியில் பொல்லார்ட் சேர்க்கப்படவில்லை. அது கடினமான ஒன்றுதான். அதை அவர் ஏற்றுக்கொண்டார். அவரை முழுவதுமாக அணியில் இருந்து ஒதுக்க முடியாது. அவர் இப்போதும் மேட்ச் வின்னர்தான். அதோடு வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் வாய்ப்புள்ளதோ, அதை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதே போல இன்னும் சில ஆச்சரிய மாற்றங்கள் அணியில் அடுத்தடுத்து இடம் பெறும்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close