[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

ஒரே காலோடு பந்துவீசும் ஆச்சரிய கிரிக்கெட் வீரர்!

meet-the-one-legged-cricketer-from-pakistan

உலகின் சிறந்த பல வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்கி இருக்கிறது, பாகிஸ்தான். இம்ரான் கான், வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயிப் அக்தர், சமீத்திய முகமது ஆமிர் என பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக விளங்கியவர்கள் இவர்கள். இவர்களின் ஏரியாவில் இருந்து வந்திருக்கிறார் இன்னொரு வேகம், சையத் ஷெர் அலி அப்ரிடி. இதில் என்ன அச்சரியமென்றால், இந்த அப்ரிடிக்கு வலது கால் கிடையாது!

‘எனக்கு 2 வயசா இருக்கும் போது கடுமையான மழை. எங்க வீடு மண்குடிசை. திடீர்னு இடிஞ்சு விழுந்ததுல என் வலது கால் போயிடுச்சு’ என்கிற அப்ரிடிக்கு, தன்னம்பிக்கை மட்டும் போகவில்லை. கிரிக்கெட் பார்ப்பது மட்டும்தான் இந்த அப்ரிடிக்கு ஒரே ஆறுதல். தொடர்ந்து பார்த்துவந்த அவருக்கு விளையாட ஆசை வந்தது. அதுவும் பந்துவீச்சு ஆசை. ஒரு காலை வைத்துக்கொண்டு எப்படி பந்துவீச? என்ற கவலை வந்தாலும் செயற்கைகால் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டார். அவரது விடா முயற்சிக்கு கைமேல் பலன். 

‘ஸ்கூல்ல அக்கம்பக்கத்துல நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் எனக்கு உதவினாங்க. அதனால என்னால தொடர்ந்து கிரிக்கெட் விளையாட முடிஞ்சது. ஆனா, ஒரு நாளும் எனக்கு கால் இல்லைங்கற கவலையோட இருந்தது இல்லை. அதை ஒரு பிரச்னையாகவும் நினைக்கலை. மத்தவங்களை மாதிரிதான் செயல்படறேன்’ என்கிற ஷெர் அலி அப்ரிடி, தொடர்ந்து சிறப்பாக பந்துவீச, பாகிஸ்தானின் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது.

’எனக்கு சோயிப் அக்தர்தான் இன்ஸ்பிரேஷன். அவர்தான் என் ஹீரோ. அவர் பந்துவீசும் ஸ்டைலை ரொம்ப ரசிச்சுப் பார்ப்பேன். அவரை போல வேகமாக பந்துவீசணும்னு ஆசை. சின்ன வயசுலயே கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சுட்டாலும் நாட்டுக்காக ஆடணுங்கற ஆசை நிறைவேறாம போயிடுமோன்னு நினைச்சேன். 2012-லதான் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் டீம் இருக்குன்னு தெரிய வந்தது. பிறகு அதில் சேர்ந்தேன். தொடர்ந்து என்னோட முழுத் திறமையையும் போட்டு விளையாடறேன். அதுக்கு மேல கடவுள் இருக்கார்’ என்கிறார், 189 சென்டிமீட்டர் உயரம் கொண்ட இந்த அப்ரிடி!

‘என் மகன் கிரிக்கெட்டரா இருக்கிறதுல எங்களுக்கு மகிழ்ச்சி. அவன் எங்களை பெருமை படுத்தியிருக்கான். அவன் பாகிஸ்தான் பெருமை படற மாதிரி இன்னும் வளருவான்னு நம்பிக்கை இருக்கு’ என்கிறார் அவரது அப்பா மோமின் கான்.
அதை ஆமோதிக்கும் அப்ரிடி, ‘பாகிஸ்தானே பெருமைப்படும் விதமா, கண்டிப்பாக உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளரா ஒரு நாள் நான் மாறுவேன்’ என்கிறார் ஆணித்தரமாக! 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close