[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆளுநர்-முதலமைச்சர் இடையேயான பிரச்னையை தீர்த்து புதுச்சேரியில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் கடிதம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலின் காரணமாக, பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டு தொடர்களிலும் அரசு உத்தரவு அளிக்கும் வரை ஈடுபடப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம் - ராஜீவ் சுக்லா (ஐபிஎல் தலைவர்)
  • BREAKING-NEWS கிரண்பேடியின் அழைப்பை ஏற்று இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறேன்- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
  • BREAKING-NEWS புதிய உச்சத்தில் தங்கம் விலை -ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.3,196க்கு விற்பனை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை! ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பும் ரத்து!
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

முத்தரப்பு டி20: தினேஷ் கார்த்திக், பாண்டே பவரில் வென்றது இந்தியா!

thakur-pandey-fashion-india-s-emphatic-win

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் அணிகள் இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இந்திய அணியில் ரிஷாப் பண்டுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். மழையை முன்னிட்டு ஒன்றரை மணி நேரம் தாமதமாக போட்டித் தொடங்கியது. இதனால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 9 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 38 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். உனட்கட், சேஹல், விஜய் சங்கர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சிக்சர் மற்றும் பவுண்டரியுடன் ரன் கணக்கைத் தொடங்கிய ரோகித் சர்மா, நின்று சாதிப்பார் என்று பார்த்தால், தனஞ்செயாவின் சுழலை இறங்கி அடிக்க, அது கேட்சாகி வெளியேறினார். அவர் 7 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஏமாற்றினார். முந்தைய போட்டிகளில் சிறப்பாக ஆடிய தவானும் தனஞ்செயாவின் சுழலுக்கு 8 ரன்னில் இரையானார். அடுத்த வந்த கே.எல்.ராகுலும் சுரேஷ் ரெய்னாவும் அதிரடி காட்டினர். சுரேஷ் ரெய்னா, 15 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து, தேவையில்லாத ஷாட்டை ஆடி வெளியேறினார். கே.எல்.ராகுல் ஹிட் விக்கெட் முறையில் 18 ரன்களுக்கு அவுட் ஆக, பரபரப்புப் பற்றிக் கொண்டது போட்டியில்.


அடுத்து வந்த மணீஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்திக்கும் வசமாக வந்த பந்துகளை விளாசியதை அடுத்து, 17.3 ஓவர்களில் இந்திய அணி 153 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. தினேஷ் கார்த்திக் 25 பந்தில் 39 ரன்களும் மணீஷ் பாண்டே 31 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றியின் மூலம் முதல் லீக் போட்டியில் தோற்றதற்கு இலங்கையை பழிவாங்கிக் கொண்டது இந்திய கிரிக்கெட் அணி.

நாளை நடக்கும் 5 வது லீக் போட்டியில் பங்களாதேஷை மீண்டும் எதிர்கொள்கிறது இந்திய அணி.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close