[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்

மீண்டும் சொதப்பினார் ரோகித் சர்மா

india-win-the-toss-and-choose-to-bat-against-south-africa-shikhar-dhawans-100th-odi

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நடக்கிறது. தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணியும் களமிறங்கியுள்ளது. டாஸ் வென்ற அணி முதல் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு இது 100வது ஒருநாள் போட்டியாகும். இந்தப் போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க பதிவாக இருக்கும்.

ஒருநாள் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா, இந்தப் போட்டியிலும் 5 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் முறையே 20, 15, 0 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ரோகித் சர்மா தற்போது சோபிக்க தவறிவிட்டார். டெஸ்ட் தொடரிலும் அவர் முறையே 11, 10, 10, 47 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். தென்னாப்பிரிக்கா தொடரில் மொத்தம் 8 இன்னிங்சில் விளையாடியுள்ள(டெஸ்ட் சேர்த்து) ரோகித் 118 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

         

இந்திய அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 29(28), கேப்டன் விராட் கோலி 14(19) ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close