[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

வைரலாகும் கோலியின் ஹை ஜம்ப்! கிரிக்கெட்டரா? ஜம்ப்பரா?

on-twitter-kohli-s-gravity-defying-jump-overtakes-his-batting-show

தென்னாப்ரிக்க தொடரின் போது விராட் கோலி தாவிய ஜம்ப்புகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும், சிக்கலான நேரத்திலும் 54, 41 என ரன்களை குவித்தார். இதுவும் இந்திய வெற்றிக்கு ஒரு காரணம் என்றால் யாராலும் மறுக்க இயலாது. 

இந்நிலையில் தென்னாப்ரிக்க தொடரின் போது கோலி மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதற்காக, தாவி குதித்த
புகைப்படங்கள் கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் வைரலாக மாறி, இணையதளத்தை சுற்றி வருகிறது.

இதில் 3வது டெஸ்டின் 2வது இன்னிங்க்ஸில், டி வில்லியர்ஸ் அவுட் ஆன உடன் மகிழ்ச்சியில் தாவிக்குதிக்கும் கோலி, பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படும் உயரத்திற்கு தாவியுள்ளார்.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ள பலரும், இவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால் இந்தியாவுக்கு உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் கிடைப்பது நிச்சயம் என கூறியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close