[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

உங்களை யாரும் நம்பலைன்னா..? விராத் சொல்லும் ரகசியம்!

this-win-will-be-remembered-for-a-long-time-kohli

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தன. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்தது. 241 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடியது தென்னாப்பிரிக்க அணி. மைதானத்தின் மோசமான தன்மை காரணமாக இரு அணி கேப்டன்களின் கருத்தைக் கேட்டு நான்காவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. 

டீன் எல்கரும், ஆம்லாவும் நிதானமாக விளையாடி நெருக்கடியை ஏற்படுத்தினர். ஆம்லா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 53 ரன்களுக்குள் எஞ்சிய விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க அணி இழந்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமறங்கி போராடிய எல்கர் 86 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய தரப்பில் முகமது ஷமி ‌5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

வெற்றிக்கு பின் கேப்டன் விராத் கோலி கூறும்போது, ’இந்த சவாலான பிட்சில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பிட்ச்-சில் ஆட உறுதியும் கட்டுக்கோப்பும் தேவைப்பட்டது. எங்கள் வீரர்கள் தைரியத்தோடு விளையாடினார்கள். ஓர் அணியாக செயல்பட்டு, நாங்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளோம். எங்கள் மீது கடும் விமர்சனம் இருந்தது. யாருமே உங்களை நம்பவில்லை என்றால், யாரும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால், நம்மீது நாம்தான் நம்பிக்கை வைக்கவேண்டும். அதனால் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படாமல் விளையாடினோம். ஒர் அணியாக இணைந்து எல்லோரும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். அது நடந்தது.

இந்த தொடர் முழுவதும் நம் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இந்த வெற்றி நம் அணிக்கு பெரிய மைல்கல். எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி கொடுத்திருக்கிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிக்கு அருகில்தான் இருந்தோம். இருந்தாலும் தோற்றோம். இந்த வெற்றி அதை மறக்க வைத்திருக்கிறது’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close