[X] Close
JUST IN
 • BREAKING-NEWS 2016 டிசம்பர் 4ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே ஜெயலலிதா இறந்துவிட்டார் - திவாகரன்
 • BREAKING-NEWS கமலுடன் கூட்டணி வைப்பது பற்றி காலம்தான் பதில் சொல்லும் - ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி
 • BREAKING-NEWS கூடுதல் பணி செய்ய போக்குவரத்து தொழிலாளர்களை கட்டாயப்படுத்துதல், விடுமுறை தர மறுப்பதற்கு விஜயகாந்த் கண்டனம்
 • BREAKING-NEWS சுகோய் போர் விமானத்தில் பறந்த அனுபவம் மறக்க முடியாதது - பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்
 • BREAKING-NEWS டெல்லி மருத்துவக்கல்லூரியில் தமிழ் மாணவர் சரத்பிரபுவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது - பா.ரஞ்சித்
 • BREAKING-NEWS இதுவரை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து விதமான ரூ.10 நாணயங்களும் செல்லும் - ரிசர்வ் வங்கி
 • BREAKING-NEWS இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை சுடவில்லை என ராஜஸ்தான் கொள்ளையன் நாதூராம் வாக்குமூலம்
 • BREAKING-NEWS அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்க வேண்டும்- விஜயகாந்த்
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பிரதமரின் வருகையை உறுதி செய்ய டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்
 • BREAKING-NEWS டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திருப்பூர் மாணவர் சரத்பிரபு கழிவறையில் சடலமாக கண்டெடுப்பு
 • BREAKING-NEWS கோவில்பட்டியில் பாலத்தின் மீது வேன் மோதி விபத்து- 6 பேர் பலி
 • BREAKING-NEWS சிறந்த தலைவரும், திரைப்பட கலைஞருமான எம்ஜிஆரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்வோம்- மம்தா பனர்ஜி
 • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களின் போரட்டம் 23 ஆவது நாளாக தொடர்கிறது
விளையாட்டு 14 Jan, 2018 07:51 AM

விக்கெட்டுக்கு உதவிய கவுன்டி அனுபவம்: அஸ்வின் மகிழ்ச்சி

ashwin-boosts-india-against-south-africa

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், முதல் நாளில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

செஞ்சுரியன் நகரில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டீன் எல்கர், மார்க்ரம் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு அவர்கள் 85 ரன்கள் சேர்த்தனர். எல்கர் 31 ரன்களில் வெளியேறினார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்க்ரம் 94 ரன்களில் வெளியேறினார். டி வில்லியர்ஸ் 20 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய ஆம்லா 82 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து குயிண்டன் டி காக், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் கேப்டன் டூ பிளஸ்ஸி 25 ரன்களுடனும், கேசவ் மகராஜ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தப் போட்டி பற்றி அஸ்வின் கூறும்போது, ‘ஆடுகளம் பிளாட்டாக இருந்து. புற்கள் அதிகமாக இல்லை. பந்தை எப்படி வீச வேண்டும் என்று அதிகமாக நேற்று யோசிக்கவில்லை. குறிப்பிட்ட இடத்தில் வீசி, எப்படி விக்கெட்டை வீழ்த்துவது என்பதுதான் நோக்கமாக இருந்தது. இதற்கு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் உதவியது. ரசித்து பந்துவீசினேன். அதற்கு பலன் கிடைத்தது. நேற்றைய ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் விக்கெட் எடுத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விக்கெட்டுகளை எடுத்ததால், நாளைய (இன்றைய) போட்டி தெம்பாக இருக்கும். என் கிரிக்கெட் கேரியரில் ரிலாக்ஸாக பந்துவீசியது நேற்றைய ஆட்டத்தில்தான்’ என்று கூறியுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close