[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர் தேவை: பாக் முன்னாள் வீரர் கருத்து

rahul-dravid-like-coach-need-of-the-hour-for-pakistan-u-19-team-ramiz-raja

 

பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் அணிக்கு ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா. இவர் தற்போது ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளர் பாகிஸ்தான் இளையோர் கிரிக்கெட் அணிக்கு தேவை என தெரிவித்துள்ளார். அணியின் வெற்றியை எதிர்நோக்கும் அதேவேளையில் இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பயிற்சியையும் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை நாம் அடையாளம் காண வேண்டும் அவர்களுக்கு  தேவையான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி அவர்கள் எதிர்காலத்தில் பிரகாசிக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இந்தியா கொடுத்து வைத்துள்ளது. அவர்கள் ராகுல் டிராவிட் போன்ற பயிற்சியாளரை நியமித்துள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இளம்வீரர்களுக்கு டிராவிட் போன்று ஒரு ஆசிரியரும் ஒரு வழிக்காட்டியும் கிடைத்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாகவும், சிறந்த வீரராகவும் திகழ்வர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களில் சிறந்த வீரர்களை அடையாளம் காண்பது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close