[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
விளையாட்டு 26 Dec, 2017 08:46 AM

’பாக்சிங் டே’ டெஸ்ட்: வார்னர் சதம், வலுவான தொடக்கத்தில் ஆஸி!

warner-takes-charge-to-leave-england-fearing-a-long-day

ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ‘பாக்சிங் டே’ டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் அபார சதம் அடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று டெஸ்ட்டுகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஆ‌ஷஸ் கோப்பையை தக்க வைத்துக்கொண்டது. நான்காவது டெஸ்ட் மெல்போர்னில் இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. கிறிஸ்துமஸுக்கு மறு நாள் நடக்கும் இந்தப் போட்டி, ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி, பேன்கிராப்டும் வார்னரும் களமிறங்கினர். பேன்கிராப்ட் 26 ரன்னில் அவுட் ஆனார். அவர் விக்கெட்டை வோக்ஸ் கைப்பற்றினார். அபாரமாக விளையாடிய வார்னர் சதமடித்தார். இது அவருக்கு 21வது டெஸ்ட் சதம். அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 129 ரன் எடுத்து ஆடி வருகிறது. வார்னரும் கவாஜாவும் களத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close