[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

வாஷிங்டன் சுந்தரை உற்சாகப்படுத்திய ’பிந்தாஸ்’!

bindaas-cricket-ravi-shastri-advises-the-youngster

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார் தமிழக இளம் ஆல்- ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர்.

அந்தப் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே அவர் சாய்த்தார். அடுத்த ஒரு நாள் போட்டியில் அவர், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ’ டி20 போட்டியில் ஆடியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மொகாலியில் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான போது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சார், ‘பிந்தாஸா (கவலையில்லாமல்) விளையாடு என்றார். இந்த ’பிந்தாஸ்’ என்கிற வார்த்தையை என்னிடம் இரண்டு வாரத்தில் குறைந்தபட்சம் ஆறேழு முறை பயன்படுத்தி இருப்பார். அந்த வார்த்தை என்னை உற்சாகப்படுத்தியது. ரசித்து ஆடு என்றும் உன் மேல் நம்பிக்கை வை என்றும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். தோனி போன்ற மூத்த வீரர்களுடன் டிரெஸ்சிங் அறையில் பேசிக்கொண்டிருக்கும் கனவு எனக்கு நிறைவேறி இருக்கிறது. இந்த சின்ன வயதிலேயே எனக்கு அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நாள் போட்டியில் என்னால் ஆட முடியாமல் போய்விட்டது. அதற்கு புட் பாய்சன் காரணமாகிவிட்டது. அந்த மைதானத்தில் என்னால் சிறப்பாக ஆடியிருக்க முடியும். களமிறங்கிய இரண்டு போட்டிகளில் பேட்டிங் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த வாய்ப்பு அடுத்தடுத்தப் போட்டிகளில் கிடைக்கும் என நினைக்கிறேன்’ என்றார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close