[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

கே.எல்.ராகுல் அரைசதம் விளாசல்: இலங்கைக்கு 181 ரன்கள் இலக்கு

dhoni-and-pandeys-late-charge-pushes-india-to-180-3

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 

எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 17 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். 12.3 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்கள் எடுத்தது. 61 ரன்னில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அடுத்த களமிறங்கிய தோனியும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தோனியுடன், மணிஷ் பாண்டே இணைந்து பவுண்டரிகளை அடித்தார். இருப்பினும் ரன் ரேட் சீரான வேகத்திலேயே உயர்ந்தது. 

இறுதியில் இந்திய அணி 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. தோனி 39(22), மணிஷ் பாண்டே 32(18) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 4 ஓவர்களில் 61 ரன்கள் எடுக்கப்பட்டது. இலங்கை அணி தரப்பில் பெராரா, மேத்யூஸ், பெர்னாண்டோ தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 181 என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close