[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

அனுஷ்காவுக்கும் கோலிக்கும் அடுத்த வாரம் கல்யாணம்?

virat-kohli-anushka-sharma-set-for-italian-wedding-in-dec-but-there-is-denial-again

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் அடுத்த வாரம் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கோலியும், அனுஷ்காவும் 2013-ம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். கோலி வெளிநாடுகளுக்கு விளையாட செல்லும் பொழுதெல்லாம் அனுஷ்காவை அழைத்துச் செல்வார். இந்தியாவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு வருகின்றனர். இடையில் 2015-ம் ஆண்டு சிறிது காலம் பிரிந்து இருந்தாலும், மீண்டும் சேர்ந்து கொண்டனர். 

             

இந்நிலையில், கோலி-அனுஷ்கா திருமணம் அடுத்த வாரம் இத்தாலியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் 9 முதல் 11-ம் தேதிக்குள் இந்தத் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தி அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை. 

இந்தத் திருமணத்திற்கு கிரிக்கெட் வீரர்கள் யாருக்கும் அழைப்பு வந்ததாக தெரியவில்லை. டிசம்பர் 21-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் அழைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும் கோலி-அனுஷ்கா திருமணம் நடைபெறுவதாக செய்திகள் வெளியாகி பொய்யாகி போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close