[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை

russia-is-banned-from-competing-in-the-2018-pyeongchang-games

தென்கொரியாவில் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்ய அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கலந்துகொள்ள அனுமதிக்கக் கூடாது என பல்வேறு நாடுகள் ஒலிம்பிக் கமிட்டிக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு பல வீரர்களின் பதங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஊக்கமருந்து சோதனையில் சிக்கி பல ரஷ்ய வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த முறை ரஷ்யாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருத்து பயன்படுத்தியது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த 17 மாதங்களாக நடத்திய விசாரணையில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வீரர், வீராங்கனைகள் அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் ஊக்கமருந்துகளை பயன்படுத்தி ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வந்தது பல்வேறு கட்ட சோதனைகளில் தெரியவந்தது.

இந்த நிலையில் ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி அளிப்பதா அல்லது தடை விதிப்பதா என்பதை முடிவு செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செயற்குழு நேற்று கூடியது.இதில் தென்கொரியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து சோதனையில் வெற்றி பெற்ற ரஷ்ய வீரர், வீராங்கனைகள், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள ரஷ்ய வீரர்கள் தனி நபர்களாக களம் இறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கலந்துகொள்ளும் வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் வேண்டுமானால் போட்டியில் கலந்துகொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் கொடி, சீருடை போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close