[X] Close
JUST IN
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
 • BREAKING-NEWS முட்டை விலை உயர்வை காரணம்காட்டி சத்துணவில் முட்டையை நிறுத்த முயற்சிப்பது வேதனை தருகிறது- ஸ்டாலின்
 • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜகவால் கால் அல்ல, கையை கூட ஊன்ற முடியாது: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கட்சித்தொடங்க தொண்டர்களிடம் பணம் கேட்ட ஒரே நபர் கமல்ஹாசன்- அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் 2 குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
விளையாட்டு 11 Nov, 2017 10:53 AM

தோனியை விமர்சிப்பதா? அகர்கரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

ms-dhoni-faces-criticism-from-ajit-agarkar-trolls-say-mla-commenting-on-pm-job


 கிரிக்கெட் வீரர் தோனி, டி20 கிரிக்கெட் போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜீத் அகர்கர் விமர்சனம் செய்திருந்தார். அவரை தற்போது தோனி ரசிகர்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப்போட்டியில் தோனி 49 ரன்கள் குவித்தாலும் அணி தோல்வி அடைந்தது. தோனியால் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க இயலவில்லை எனவும் அவர் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து அகர்கர், 2வது போட்டியில் தோனி 10வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் இன்னும் எத்தனை முறை நீங்கள் பேட்டிங் செய்யப் போகிறீர்கள்? டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி, தோனிக்கு மாற்று வீரரை தேட வேண்டிய நேரம் இது. ஒரு நாள் கிரிக்கெட்டில் தோனியின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. ஆனால் இருபது ஓவர் கிரிக்கெட்டில் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தோனி ஆதரவாளர்கள் ட்விட்டரில் அகர்கரை வறுத்தெடுக்கின்றனர். ஒரு சட்டமன்ற உறுப்பினர் பிரதமர் பணியை விமர்சனம் செய்வது போல் அகர்கரின் விமர்சனம் உள்ளது என ஒருவர் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலர், அகர்கருக்கு வேறு வேலை இல்லாததால், மீடியாவில் பரபரப்பாக தான் பேசப்பட, இவ்வாறு கூறுகிறார் என பதிவிட்டுள்ளனர். ’தோனியை விடுங்கள், முதலில் இந்தியாவுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று யோசியுங்கள். அவர் பற்றி விமர்சிக்க உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை. அவரின் ஓய்வு பற்றி பேச நீங்கள் யார்?’ எனவும் விளாசியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close