[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கெய்ல், தோனி வரிசையில் இணைந்தார் டிவில்லியர்ஸ்!

ab-de-villiers-joins-gayle-dhoni-in-six-hitting-club

இருநூறு சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்களின் வரிசையில், 5 வது இடத்தைப் பிடித்துள்ளார் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த பங்களாதேஷ் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, நேற்று நடைபெற்றது. 
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. டிவில்லியர்ஸ் 176 ரன்கள் குவித்தார். இதன் மூலம், அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். அந்த நாட்டின், கிறிஸ்டன் (188 நாட் அவுட்), டுபிளிசிஸ் (185), டி காக் (178) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். நேற்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் 7 சிக்சர் அடித்தார். இதையடுத்து ஒரு நாள் போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த வீரர்களின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் அவர் உள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் சாகித் அப்ரிதி ( 351 சிக்சர்), இலங்கையின் ஜெயசூர்யா (270), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (252), இந்தியாவின் தோனி (213) ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close