[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோட்டையில் ஏற்றப்பட்ட தேசிய கொடியில் ஓட்டை
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் மெர்சல் திரைப்படத்தில் இருந்து 4 காட்சிகள் நீக்க தயாரிப்பு தரப்பு முடிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் டெங்கு மற்றும் காய்ச்சலுக்கு இன்று இதுவரை 4 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS தஞ்சை கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி வெளியேறக்கோரி 155 ஆவது நாளாக போராட்டம்
  • BREAKING-NEWS காய்ச்சலால் தொடரும் மரணங்கள்: நேற்று மட்டும் 10 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருவள்ளூரில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த 2,533 வீடுகளுக்கு நோட்டீஸ்: ஆட்சியர்
  • BREAKING-NEWS திண்டிவனத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட 2 கட்டடங்களுக்கு ரூ.2லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்பட்ட திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000அபராதம்
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
விளையாட்டு 09 Oct, 2017 07:53 AM

ரபாடா வேகத்தில் சரிந்தது பங்களாதேஷ்: தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி!

rabada-s-ten-for-wraps-up-crushing-win

பங்களாதேஷூக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்கா- பங்களாதேஷ் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புளோம்ஃபோன்டீனில் நடந்துவந்தது. முதல் இன்னிங்கிஸில் 4 விக்கெட் இழப்புக்கு 573 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி, டிக்ளேர் செய்தது.  அந்த அணியின் டீன் எல்கர், மார்க்ராம், ஹாஷிம் ஆம்லா, கேப்டன் டூ பிளஸ்ஸி ஆகிய நான்கு பேர் சதமடித்தனர்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் பெற்றது. அந்த அணியின் மகமுத்துல்லா மட்டும் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்களையே எடுத்தனர். இதையடுத்து 172 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. தென்னாப்பிரிக்கா, இன்னிங்ஸ் மற்றும் 254 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபடா, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close