[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் துணை ராணுவப்படையினர் சென்ட்ரல் வந்தனர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வாகியிருப்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தமிழிசை
  • BREAKING-NEWS மத்திய பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு ராகுல் காந்தியே சிறந்த மாற்றுத் தலைவர் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • BREAKING-NEWS குஜராத் தேர்தலில் எல்லைமீறி பாஜக பரப்புரை செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட்
  • BREAKING-NEWS மீனவர்கள் மீட்காததை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் முன் நாளை போராட்டம்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
  • BREAKING-NEWS வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,815 கனஅடியில் இருந்து 2,375 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் கடலில் இறங்கி பெண்கள் போராட்டம்
  • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
விளையாட்டு 06 Oct, 2017 08:06 AM

ராகுலுக்கு வாய்ப்பில்ல, ரஹானேவை சேர்க்கல: கவாஸ்கர் சாடல்!

gavaskar-slams-selectors-for-rahane-s-t20-omission

டி20 போட்டியில் ரஹானேவை சேர்க்காதது ஏன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமான ஒரு நாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹானே சேர்க்கப்படவில்லை. இது பல்வேறு தரப்பில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும்போது, ‘ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரில், ரஹானே தொடர்ந்து நான்கு அரை சதம் அடித்து சிறப்பாக ஆடினார். அவரை டி 20 போட்டியில் சேர்க்காதது ஏன் என்று தெரியவில்லை. ஒரு நாள் போட்டிகளில், கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. டி20 போட்டியில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்று தேர்வாளர்கள் சொல்லலாம். பிறகு ஏன் அவருக்கு ஒரு நாள் போட்டியில் இடம் கொடுக்கவில்லை? அவரை அணியில் சேர்த்துள்ள போது, ரஹானேவை ஏன் நீக்க வேண்டும்? நல்ல பார்மில் இருக்கும் வீரருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், மனரீதியாக அவர் பாதிக்கப்படுவார். ஆட்டத்திறனும் பாதிக்கப்படும். இதை தேர்வுக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close