[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
  • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
விளையாட்டு 22 Sep, 2017 07:30 AM

பாண்ட்யா அவுட்டா, அவுட் இல்லையா?

lucky-escapes-for-pandya

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராத் கோலி 92 ரன்களும், ரஹானே 55 ரன்களும் எடுத்தனர். கவுல்டர் நைல், ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 
253 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி, 44-வது ஓவரிலேயே 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 59 ரன்களும், ஸ்டோய்னிஸ் ‌62 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, 47.4 வது ஓவரில் ரிச்சர்ட்சன் வீசிய புல்டாஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஹர்திக் பாண்ட்யா. அதை ஸ்மித் பிடித்தார். அப்போது மழை குறுக்கிட்டதால், கிரீசை விட்டு வெளியே சென்றார் பாண்ட்யா. அந்த பந்து, பாண்ட்யாவின் இடுப்புக்கு மேல் சென்றதால் நோ- பாலாக அறிவிக்கக் கூடும் என்று கருதி, ஸ்மித் சக வீரர்களிடம் ரன் அவுட் செய்ய சொன்னார். மழையால் ஆட்டம் 15 நிமிடம் பாதிக்கப்பட்ட பின், இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அந்த பந்து நோ -பாலாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாண்ட்யாவுக்கு ரன் அவுட் வழங்க வேண்டும் என்று ஆஸி.வீரர்கள் கேட்டனர். ஆனால் அவர் மழை காரணமாகவே கிரீசை விட்டு வெளியேறினார் என்று அவுட் கொடுக்க, நடுவர்கள் மறுத்துவிட்டனர்.


 

Advertisement:
Related Tags : Hardik PandyaCricket
Advertisement:
Advertisement:
[X] Close