[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
விளையாட்டு 04 Sep, 2017 04:44 PM

தோனியின் ஸ்டம்பிங் சாதனைக்கு அச்சாரமிட்ட சச்சின்

india-vs-sri-lanka-after-ms-dhoni-s-100th-stumping-a-special-mention-from-sachin-tendulkar

சர்வதேச ஒருநாள் போட்டியில் முதல் வீரராக 100 ஸ்டம்பிங் செய்துள்ள மகேந்திர சிங் தோனிக்கு சச்சின் டெண்டுல்கர் சிறப்பு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். சச்சின் வாழ்த்தில் என்ன சிறப்பு என்றால், தோனியின் புதிய சாதனைக்கு அச்சாரமிட்டவர் சச்சின் தான்.

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திரா சாஹல் வீசிய 45-வது ஓவரில் இலங்கை வீரர் தனன்ஜயாவை தோனி அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார்.

இந்த ஸ்டம்பிங் மூலம் தோனி 100 ஸ்டம்பிங் செய்து, இலங்கை வீரர் சங்ககாராவின் சாதனையை முறியடித்தார். தோனிக்கு அடுத்தபடியாக உள்ள சங்ககாரா மொத்தம் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார். அவர் 360 போட்டிகளில் பங்கேற்று இந்த சாதனையை செய்திருந்தார். ஆனால் தோனி 301 போட்டிகளிலேயே ஸ்டம்பிங்கில் சதம் அடித்துள்ளார்.

100 ஸ்டம்பிங் செய்த தோனிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டர் பக்கத்தில், “யார் சொன்னது மின்னல் இரண்டு முறை தாக்காது என்று? அது 100-வது முறை தாக்கியுள்ளது! வெல் டன்!, வரும் காலத்தில் இதை தொடருங்கள் தோனி” என்று தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார்.

100 ஸ்டம்பிங் செய்துள்ள தோனி, முதல்முறை ஸ்டம்பிங் செய்தது சச்சின் பந்துவீச்சில்தான். 2004 ஆம் ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி அறிமுகமானார். இந்த தொடரில், சச்சின் பந்துவீச்சில் வங்கதேச வீரர் ரஜின் சலே-வை ஸ்டம்பிங் செய்து தோனி தனது கணக்கை தொடங்கினார்.

இதனிடையே, தோனி ஸ்டம்பிங் செய்த 100 பேரின் படங்களையும் அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close