[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணியின் பலம் மற்றும் பலவீனம்..

strength-and-weakness-of-india-and-australia-team

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் ஆண்கள் பிரிவில், அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான முக்கிய ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து தெரிந்து கொள்வோம்.

20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நம்பன் ஒன் அணி என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய தோனி தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு பின்னடைவை சந்தித்தது. இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானையும், மூன்றாவது போட்டியில் பங்களாதேஷையும் போராடி வீழ்த்தியதால் அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது இந்திய அணி.

பங்களாதேஷ் அணியுடனான ஆட்டத்தின்போது பீல்டிங்கில் செய்த தவறை மீண்டும் தொடராமல் பார்த்துக்கொண்டால் மட்டுமே இந்திய அணியால் நெருக்கடியை தவிர்க்க முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் நெஹ்ரா, பும்ரா, ஆல்ரவுண்டர் பாண்டியா ஆகியோருடன் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு பலம் சேர்த்து வருகின்றனர்.

பேட்டிங்கில் யுவராஜ், ரெய்னா, தோனி ஆகியோர் அவ்வப்போது கைகொடுத்தாலும் விராட் கோலி மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடக்கத்தில் கவலையளித்த ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோரின் தொடக்க ஆட்டம், பங்களாதேஷ் அணியுடனான போட்டிக்கு பிறகு சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியைப் போன்று ஆஸ்திரேலிய அணியும் தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டங்களில் பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகளை வென்று அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடித்தது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா, கேப்டன் டீவன் ஸ்மித், ஆல்ரவுண்டர்கள் வாட்சன், மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர்.

பாகிஸ்தான் அணியுடனான கடைசிப் போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஃபாக்னர், இன்று இந்திய அணி வீரர்களுக்கு சவால் அளிக்க வாய்ப்புள்ளது.

பி பிரிவில் இருந்து நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக அரையிறுதிக்கு முன்னேறும் அணியை தீர்மானிக்கும் இன்றைய போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close