[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி

t-20-worldcup-cricket-england-advances-to-semi-final

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு எதிரான விறுவிறுப்பு நிறைந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ பட்லர் 66 ரன்களும், ஜேசன் ராய் 42 ரன்களும் விளாசினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என விளையாடிய இலங்கை அணி, 15 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டு‌ளை இழந்தது. கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ், கபுகேதரா ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும் இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. வெற்றிக்காக போராடிய கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் அணியை தொடர்ந்து, இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close