[X] Close
JUST IN
 • BREAKING-NEWS மெக்சிகோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூகுள் நிறுவனம் ரூ.6.43கோடி நிதியுதவி
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: பனிஹால் எஸ்.எஸ்.பி துணை ராணுவப் படை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
 • BREAKING-NEWS நாமக்கல்: கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்
 • BREAKING-NEWS சென்னையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
 • BREAKING-NEWS தசரா விழாவையொட்டி சென்னையில் இருந்து மைசூருவுக்கு விமான சேவை தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீர்: பிஜிபெஹரா ரயில்நிலையத்தில் ஹிஸ்புதல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் கைது
 • BREAKING-NEWS காவிரி வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS குண்டர் சட்ட நடவடிக்கை ரத்தானதை அடுத்து மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி விடுவிப்பு
 • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS இன்று மாலை நடப்பதாக அறிவிக்கப்பட்ட திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் விசாரணை தொடங்கியது
 • BREAKING-NEWS 2ஜி வழக்கில் தீர்ப்பு தேதி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அறிவிப்பு
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது அதிகார துஷ்பிரயோகம்: சீமான்
 • BREAKING-NEWS எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் பற்றி விமர்சிக்க திமுகவுக்கு அருகதையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்
விளையாட்டு 31 Aug, 2017 06:29 PM

கோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 375 ரன்கள் குவிப்பு

kohli-and-rohit-took-centuries-as-india-scored-375-runs

இலங்கை அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இந்தியா 375 ரன்கள் குவித்தது.

கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தவான் 4 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி இணைந்து இலங்கை வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். 

அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 76 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 96 பந்துகளில் 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில், 2 சிக்ஸர்களும், 17 பவுண்டரிகளும் அடங்கும். கோலி ஆட்டமிழந்த போது, இந்திய அணி 29.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து இருந்தது. ரோகித்-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. 

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா நிதான ஆட்டத்தை வெளிபடுத்த ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 பந்துகளில் சதம் அடித்தார். இதனையடுத்து, மேத்யூஸ் வீசிய 35-வது ஓவரில் பாண்டியா(19), ரோகித் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் 88 பந்துகளில் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய கே.எல்.ராகுல் 7 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. 

இதனையடுத்து, மணிஷ் பாண்டே, தோனி இருவரும் ஜோடி சேர்ந்து நிதானமாக ரன்களை சேர்த்தனர். 42.4 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்கள் சேர்த்தது. தோனி, மணிஷ் பாண்டேவின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் இந்திய அணி 50 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் குவித்தது. மணிஷ் பாண்டே 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். தோனி 49 ரன்கள் எடுத்து  ஒரு ரன்னில் அரைசதத்தை நழுவவிட்டார். தோனி, மணிஷ் ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில், மேத்யூஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். 

5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் இந்திய அணிக்கு இந்த போட்டியின் முடிவு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 

ஆனால், இதிலும், அடுத்த போட்டியிலும் வென்றால்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இடம்பெற முடியும் என்ற நிலை இலங்கை அணிக்கு உள்ளது. அதனால், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. 376 ரன்கள் இலக்கு என்பதால் இலங்கை அணிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close