[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தால் எவ்வித பயனும் இருக்கப்போவதில்லை: ஸ்டாலின்
 • BREAKING-NEWS ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் வைகோவை சிங்களர்கள் தாக்க முயன்றதற்கு ஸ்டாலின் கண்டனம்
 • BREAKING-NEWS நாட்டில் தற்போது மின் பற்றாக்குறை என்பதே இல்லை: பிரதமர் மோடி
 • BREAKING-NEWS நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா யோஜனா திட்டம் தொடக்கம்
 • BREAKING-NEWS மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள் விரைவில் தேர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன்
 • BREAKING-NEWS நடிகர் சிவாஜி கணேசன் மணி மண்டபம் அக்டோபர் 1ஆம் தேதி திறப்பு
 • BREAKING-NEWS பதவியை தக்க வைத்துக் கொள்வதிலேயே ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அத்திப்பட்டு புதுநகர் அருகே சங்கமித்ரா விரைவு ரயில் மீது மின்கம்பி அறுத்து விழுந்தது
 • BREAKING-NEWS ஜெயலலிதா மறைந்ததும் அதிமுகவை சிறு சலசலப்பும் இல்லாமல் கட்டிக் காத்தவர் சசிகலா: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS வடகொரியா உள்பட 8 நாட்டுக்கு அமெரிக்கா தடை
 • BREAKING-NEWS செந்தில் பாலாஜி எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் 11 பேருக்கு வருமான வரித்துறை சம்மன்
 • BREAKING-NEWS ரூ.50,000க்கும் மேல் பட்டாசு வாங்க ஆதார் அவசியம்
 • BREAKING-NEWS டெல்லியில் பா.ஜ.க தேசிய செயற்குழு 2வது நாளாக ஆலோசனை
விளையாட்டு 26 Aug, 2017 10:13 PM

மீண்டெழுந்து இந்திய அணியை வீழ்த்துவோம்: இலங்கை கேப்டன் கபுகேதரா

let-s-defeat-the-indian-team-sri-lanka-captain-kapugedara

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று திறமையை நிரூபிப்போம் என இலங்கை அணியின் இடைக்கால கேப்டன் கபுகேதரா தெரிவித்துள்ளார்.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது.

நாளை 3-வது போட்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. இந்தியாவுடனான போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலகக் கோப்பஒ போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. 

இதனிடையே நாளைய போட்டி குறித்து இலங்கை அணி கேப்டன் கபுகேதரா கூறுகையில் ‘‘எங்களது அணி திணறிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கவில்லை. அணி வீரர்களுக்குள் நல்ல சூழல் இருந்து வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து விளையாடினால், வெற்றியை எங்களால் பெற முடியும். 2-வது போட்டிக்குப் பிறகு எங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. ஒரு தடையை தாண்ட வேண்டும். இதை சுற்றியே எல்லா விஷயங்களும் இருக்க வேண்டும். கடந்த போட்டியில் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், அந்த தோல்வியை நேர்மறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் எதையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். கேப்டன் பணி மிகச்சிறந்த கவுரவம். இந்த வாய்ப்பை பெற்றதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்’’ எனத் தெரிவித்தார். 


2-வது போட்டியில் இலங்கை அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் தரங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், கபுகேதரா கேப்டனாக இலங்கை அணியை வழி நடத்த உள்ளார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close