[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

அப்ரிடியைக் கட்டம் கட்டும் பாக். கிரிக்கெட் வாரியம்

pcb-announce-afridi-sacking-midway-through-worldt20

உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மட்டுமல்ல, ஒரு வீரராகவும் அந்த அணியில் தொடர அப்ரிடிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலகக் கோப்பை டி20 தொடரில் பல சர்ச்சைகளைக் கடந்து பாகிஸ்தான் அணி பங்கேற்றது. கொல்கத்தா வந்திறங்கிய அந்த அணியின் கேப்டன் அப்ரிடி இந்தியா குறித்து பேசிய கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மட்டுமல்ல, அந்நாட்டு ரசிகர்கள் இடையேயும் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி வீறுநடைபோட்ட பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் இந்திய அணியிடம் வழக்கம்போல் தோற்றது. இந்த தோல்வி அப்ரிடியின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஏறக்குறைய முற்றுப்புள்ளி வைத்துவிட்டது என்றே கூறலாம்.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் சகாரியார் கான், உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் ஓய்வு பெறுவதாக அப்ரிடி ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்த முடிவை அவர் பரிசீலித்தாலும், அவரை தேர்வு செய்வது கடினம் என்று சூசகமாகப் பேசியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close