[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
 • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
விளையாட்டு 25 Jul, 2017 07:03 PM

ரவி சாஸ்திரியை கலாய்த்த பீட்டர்சன்… உதவிக்கு வந்த நெட்டிசன்கள்

pietersen-to-mix-ravi-shastri-helps-get

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற ரவி சாஸ்திரியை, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் ட்விட்டரில் கேள்வி ஒன்றின் மூலம் கலாய்த்தார்.

ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பின்னர் அவர் இந்திய அணியுடன் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்தியா தற்போது முதலிடத்தில் உள்ளது. அதை தொடரச் செய்வதே தமது இலக்கு என்று ரவி சாஸ்திரி கூறியிருந்தார். இந்த நிலையில், சிறந்த அணியுடன் பயிற்சியாளர் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டதாக புகைப்படங்களுடன் ரவி சாஸ்திரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
இந்த பதிவுகளுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பதிலும், வாழ்த்துகளும் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ரவி சாஸ்திரியின் பதிவுக்கு பீட்டர்சன் அளித்துள்ள பதிலில், மீண்டும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு வந்துவீட்டீர்களா? என்று ஒரு கேள்வி கேட்டிருந்தார். 

இந்த பதிவின்மூலம் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவி சாஸ்திரி வந்ததைக் கூட அறியாமல் பீட்டர்சன் கேட்கிறாரா என்ற சந்தேகம் ஒருபுறம் எழுந்தாலும், ஒருவேளை ரவிசாஸ்திரியை அவர் கலாய்க்கிறார் என்றும் கருதி நெட்டிசன்கள் பதிலளிக்கத் தொடங்கிவிட்டனர். அதில், பெரும்பாலானோர் ரவி சாஸ்திரியைக் கலாய்த்து பதிவிடத் தொடங்கி விட்டனர். பீட்டர்சன் கேள்விக்குப் பதிலளித்த நெட்டிசன் ஒருவர், இலங்கையைச் சுற்றிப்பார்க்க ரவி சாஸ்திரி சென்றுள்ளார் என்றும், மற்றொருவர் கோலிக்கு உதவியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் பதிவிட்டிருந்தனர். மற்றொருவரோ, பயிற்சியாளர் என்பது நிச்சயம்தான், ஆனால் தலைமை பயிற்சியாளர் என்பது கேள்விக்குறியே என்றும் நையாண்டி செய்திருக்கிறார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close