[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

திருப்புமுனை ரன் ரவுட்: சென்டிமென்ட்டை தக்க வைத்த இந்தியா

india-southafrica-champions-trophy

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த முக்கியமான போட்டியில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி தென்னாப்பிரிக்காவின் டி காக்கும், அம்லாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி முதல் 10 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தது. ஸ்கோர் 76 ரன்களை எட்டிய போது அம்லா 35 ரன்களில் அஸ்வின் சுழலில் கேட்ச் ஆனார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருந்ததால் தென்னாப்பிரிக்க அணி அதிக ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேர்த்தியான பந்து வீச்சு மற்றும் ஆக்ரோஷமான பீல்டிங் மூலம் இந்திய அணி நெருக்கடி கொடுத்தது.
 
டி காக் 53 ரன்களில் ஜடேஜா பந்தில் கிளன் போல்டு ஆனார். பின்னர் கேப்டன் டிவில்லியர்ஸ் வந்தார். இவர் அதிரடியை ஆரம்பிக்கும் முன்பே, ரன் அவுட் ஆனார். அடுத்து டேவிட் மில்லர். ஒரு முனையில் இருந்த டு பிளிசிஸ், பந்தை அடித்துவிட்டு மறுமுனைக்கு ஓடினார். பிறகு பாதியில் திரும்ப, எதிரில் வந்துகொண்டிருந்த மில்லரும் ஒரே சைடில் ஓட, மில்லர் ரன் அவுட்.

ஆட்டத்தை மாற்றிய இந்த இரண்டு ரன் அவுட்களும் போட்டியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
44.3 ஓவர்களில் அந்த அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 12 ரன்களில் அவுட் ஆனாலும் ஷிகர் தவானும் கேப்டன் கோலியும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். தவான் 78 ரன்களில் அவுட் ஆனார். கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் சிங் 23 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம், சாம்பியன்ஸ் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதே இல்லை என்ற சென்டிமென்டை இந்திய அணி தக்க வைத்துக்கொண்டது.

 

Advertisement:
Related Tags : IndiaSouthafricaChampionstrophy
Advertisement:
Advertisement:
[X] Close