[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

ஐபிஎல் கிரிக்கெட்: பிளே ஆஃப் யுத்தம்

ipl-cricket-play-off-rounds

புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் புனே அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

முதல் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். தோல்வி அடையும் அணி, இறுதி ஆட்டத்திற்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு இருக்கிறது.

புள்ளிகள் பட்டியலில் 3ஆவது மற்றும் 4ஆவது இடங்களைப் பிடித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், எலிமினேட்டர் எனப்படும் வெளியேற்றுதல் சுற்றில் விளையாடுகின்றன. பெங்களூருவில் வரும் 17ஆம் தேதி நடைபெறும் இந்தப் போட்டில் தோல்வி அடையும் அணி, தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி, மும்பை மற்றும் புனே அணிகள் இடையே நடந்த முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தோல்வியைத் தழுவிய அணியுடன், இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணியும், இரண்டாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணியும் சாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் வரும் 21ஆம் தேதி ஹைதராபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close