[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

கெய்ல் 5, கோலி 4, வார்னர் 3... இது ஐபிஎல் செஞ்சுரி!

kohli-warner-centuries

இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்தப் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹாசிம் அம்லா (தென்னாப்பிரிக்கா) சதம் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த இரண்டாவது சதம் இது. இதற்கு முன் இவர் மும்பைக்கு எதிராக, 104 ரன்கள் எடுத்திருந்தார்.

பெங்களூர் அணிக்கு விளையாடும் கிறிஸ் கெய்ல், 5 முறை செஞ்சுரி அடித்துள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக 102, பஞ்சாப்புக்கு எதிராக 107, டெல்லி அணிக்கு எதிராக 128, புனேவுக்கு எதிராக 175, பஞ்சாப்புக்கு எதிராக மீண்டும் 117 என 5 முறை செஞ்சுரி அடித்துள்ளார்.

விராத் கோலி, குஜராத்துக்கு எதிராக 100, புனேவுக்கு எதிராக 108, குஜராத்துக்கு எதிராக 109, பஞ்சாப்புக்கு எதிராக, 113 என 4 முறை செஞ்சுரி எடுத்துள்ளார்.

பெங்களூர் அணியின் டிவில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா) இதுவரை சென்னைக்கு எதிராக 105, மும்பைக்கு எதிராக 133, குஜராத்துக்கு எதிராக 129 என 3 முறை செஞ்சுரி அடித்துள்ளார்.

ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) கொல்கத்தாவுக்கு எதிராக 107, டெக்கான் அணிக்கு எதிராக 109, கொல்கத்தாவுக்கு எதிராக 126 என 3 முறை செஞ்சுரிகளை எடுத்துள்ளார்.

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து), முரளி விஜய் (இந்தியா), கிறிஸ் கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 2 செஞ்சுரிகளை இதுவரை அடித்துள்ளனர்.

Advertisement:
Related Tags : Iplcenturies champion iplcenturies
Advertisement:
Advertisement:
[X] Close