[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சிறுபிள்ளைத்தனமான கோலி: ஆஸி. ஊடகங்கள் விமர்சனம்

india-v-australia-aussie-media-slams-classless-virat-kohli

இந்திய அணியின் கேப்டன் கோலியின் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள் மீண்டும் விமர்சனம் செய்துள்ளன.

பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றது. தொடரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியையும், அந்த அணியின் கேப்டன் ஸ்மித்தையும், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி விமர்சித்திருந்தார். அதேபோல், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை ஆஸ்திரேலிய ஊடகங்கள் முதல் டெஸ்ட் முதலே கடுமையாக விமர்சித்து வந்தன. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து வெளிவரும் டெய்லி டெலகிராப் பத்திரிகை, கோலியின் செயல்பாடுகள் முதிர்ச்சியற்ற நிலையையும், சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளது. அதேபோல ஹெரால்ட் சன் பத்திரிகையில் வெளிவந்துள்ள கட்டுரையில், ஆஸ்திரேலிய வீரர்களிடம் கோலி மன்னிப்பு கோர வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது. தொடர் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விராத் கோலி, ஆஸ்திரேலிய வீரர்களுடன் எந்த காலத்திலும் நண்பர்களாக இருக்க முடியாது என்று கருத்து தெரிவித்திருந்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close