[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

pakistan-govt-allows-team-to-compete-in-world-t20-in-india-pcb-requests-special-security

இந்தியாவில் நடைபெறும் இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியர் கான் உறுதிபடுத்தியுள்ளார்.

தங்கள் அணிக்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு வழிவகை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், இந்திய-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 19-ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close