[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்

virat-kohli-and-co-go-trekking-to-overcome-pune-loss

புனே டெஸ்ட் போட்டி தோல்வியிலிருந்து மீள்வதற்காக இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மலையேற்ற பயிற்சி மேற்கொண்டனர்.

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் தொடர்ந்து 19 போட்டிகள் தோல்வியே சந்திக்காமல் இருந்த இந்திய அணியின் வெற்றிப் பயணத்துக்கும் ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்தது. இவ்விரு அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் மார்ச் 4ல் தொடங்குகிறது. புனே டெஸ்ட் தோல்வியை மறந்து புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே உள்ளிட்ட வீரர்கள் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான புகைப்படங்களை அவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். மலையேற்ற பயிற்சி மேற்கொண்ட இடம் குறித்து எந்தவொரு வீரரும் குறிப்பிடவில்லை. ஆனால், புனேவில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள டாமினி பகுதியில் அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close