[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் கண்டுகளிக்கும் 15,000 குழந்தைகள்..!

15k-schoolkids-to-watch-india-australia-test-free-in-bengaluru

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டியை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள 15,000 குழந்தைகள் இலவசமாக நேரில் கண்டுகளிக்க உள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்க இடையேயான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

பொதுவாக சர்வதேச கிரிக்கெட் போட்டியை காண வேண்டும் என்றால் டிக்கெட் விலை அதிகமாக இருக்கும். வசதி படைத்தவர்கள் கூட வரிசையில் நின்று போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட் வாங்கிச் செல்வது வழக்கம். அப்படியிருக்க சாதாரண குடும்பத்தை சார்ந்த குழந்தைகளால் இதனை கண்டுகளிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது.

இந்நிலையில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், பொருளாதாரத்தில் பின்தங்கிய 15,000 குழந்தைகளை கிரிக்கெட் போட்டியை இலவசமாக நேரில் கண்டுகளிக்க வாய்ப்பு வழங்கியுள்ளது. பெங்களூருவில் 5 நாட்கள் நடைபெறும் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் கடைசி 3 நாட்களில் ஒவ்வொரு நாளுக்கு தலா 5 ஆயிரம் குழந்தைகள் வீதம் 3 நாட்களில் 15 ஆயிரம் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இலவசமாக போட்டியை பார்க்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க செய்தித் தொடர்பாளர் வினய் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளுக்கு அன்று தேவையான திண்பண்டங்கள், தண்ணீர் போன்ற வசதியையும் செய்து கொடுக்க முடிவெடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close