[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி

isl-football-league-kolkata-enters-to-finals

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அத்லெடிக்கோ டி‌ கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மும்பை சிட்டி எஃப் சி அணிக்கு எதிரான அரையிறுதியின் இரண்டாவது லீக் ஆட்டத்தை கொல்கத்தா அணி சமன் செய்தது. இதனையடுத்து முதல் லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் ராபர்ட் இரண்டாவது முறையாக மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதால், சிகப்பு அட்டை பெற்று வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் கிடைத்த கோல் வாய்ப்புகளை மும்பை அணி வீணடிக்க போட்டி கோலின்றி சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து மூன்றுக்கு இரண்டு என்ற கோல் விகித அடிப்படையில் முன்னிலை பெற்ற கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close