[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

சொந்த மண்ணில் சோகம்... 85 ரன்களில் சுருண்ட ஆஸி

south-africa-tour-of-australia-2nd-test

தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 85 ரன்களுக்கு சுருண்டது.

ஹோபர்ட் நகரில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒற்றை இலக்கு ரன்களில் வெளியேறினர்.ஆஸ்திரேலிய தரப்பில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பிலாண்டர் 10 ஓவர்களில் 21 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.அப்பாட் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். பவுமா 38 ரன்களுடனும், குயிண்டன் டி காக் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இன்று ஒரு நாள் மட்டும் 15 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close