[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

வைரஸ் காய்ச்சல்..முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ரெய்னா விலகல்

viral-fever-rules-raina-out-of-first-odi

வைரஸ் காய்ச்சலால் நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 அக்டோபருக்குப் பிறகு முதல்முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்ட அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மருத்துவக் குழு உறுதி செய்தது. இதனால் வரும் 16-ல் ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்கும் நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் ரெய்னாவுக்குப் பதிலாக மாற்று வீரர் யாரையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை. இதனால் காய்ச்சல் குணமடைந்த பிறகு 2ஆவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது.

பார்ம் இல்லாமல் தவித்துவந்த சுரேஷ் ரெய்னாவுக்கு, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்காவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடர் ஆகியவற்றில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close