[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளி வீரருக்கு நேர்ந்த சோதனை

paralympian-aditya-mehta-forced-to-remove-prosthetic-limb-at-bengaluru-airport-again

பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் பாராலிம்பிக் வீரரின் செயற்கை மூட்டை கழற்றுமாறு மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர் நிர்பந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆசியா பாரா சைக்கிலிங் சாம்பியன்ஷிப்பில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்றவர் ஆதித்யா மேக்தா. இவர் பெங்களூருவில் இருந்து ஹைதரபாத்திற்கு செல்வதற்காக பெங்களூரு விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது பாதுகாப்பு சோதனை என்ற பெயரில், மத்திய தொழிற்படை பாதுகாப்பு அதிகாரிகள் ஆத்தியா மேக்தாவின் செயற்கை மூட்டுகளை கழற்றுமாறு நிர்பந்தித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து ஆதித்யா மேக்தா சமூக வலைத்தளத்தில் தனது வேதனையை தெரிவித்துள்ளார். செயற்கை மூட்டை கழற்றி மாட்டும்போது வலி தாங்க முடியாமல் இரத்தம் வெளியானதாகவும் ஆதித்யா வேதனையுடன் கூறியுள்ளார். இந்த செயல் வெட்கக்கேடானது மற்றும் முறையற்றது என குறிப்பிட்ட ஆதித்யா, அதிகாரிகளுக்கு இதுபோன்ற சம்பவங்களை சமாளிக்க திறன் இல்லை எனவும் கூறியுள்ளர். இச்சம்பவம் மாற்றுத்திறனாளிகளின் மனதில் பெரும்காயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆதித்யா மேக்தா தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close