[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

suresh-raina-be-picked-in-india-s-odi-squad-against-nz

நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணியுடனான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தோனி தலைமையில் 15 பேர் கொண்ட அணி இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுரேஷ் ரெய்னா மணீஷ் பாண்டே, ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ், அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், மன்தீப் சிங், உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, தவல் குல்கர்னி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 16ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வரும் 8ம் தேதி துவங்குகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close