[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்திய அணியின் 500ஆவது டெஸ்ட் போட்டி: கொண்டாட்டங்களைத் தவிர்க்கும் சஷாங் மனோகர்

500th-test-shashank-manohar-to-skip-celebrations

இந்திய அணியின் 500ஆவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு நடைபெறும் கொண்டாட்டங்களை ஐசிசி தலைவர் சஷாங் மனோகர் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நியூசிலாந்து அணியுடன் கான்பூரில் வரும் வியாழக்கிழமை தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டி இந்திய அணி பங்கேற்கும் 500ஆவது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து பல்வேறு கொண்டாட்டங்களுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்த போட்டியைக் கண்டுகளிக்க இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்திய அணியின் 500ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் ஐசிசி தலைவரான இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் பங்கேற்க மாட்டார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த நிகழ்ச்சிகளை சஷாங் மனோகர் தவிர்த்து விட்டதாகக் கூறப்படுகிறது. முன்னாள் பிசிசிஐ தலைவரான சஷாங் மனோகர், பிசிசிஐ-க்கு சரியான சமயத்தில் உதவி செய்யத் தவறிவிட்டதாக தற்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close