[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

அவசியத்துக்கான அதிரடியே பிரியங்காவின் அரசியல் பிரவேசம் 

priyanka-gandhi-has-been-appointed-general-secretary-in-congress

பல ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஒருவழியாக அரசியலில் நுழைந்திருக்கிறார் பிரியங்கா வதரா. சோனியாவின் மகள், ராகுலின் சகோதரி,‘காந்தி குடும்பம்’என்ற பல்வேறு அடையாளங்களை வெளியிலிருந்து பலர் கூறினாலும், அதனை பயன்படுத்தாதவராகவே பிரியங்கா இருந்துள்ளார். பல்வேறு கட்டங்களில் பிரியங்கா அரசியலில் நுழைவார், உ.பி. முதல்வர் வேட்பாளராக அறிமுகம் ஆவார் என்றெல்லாம் ஆருடங்கள் கிளம்பின. ஆனால் அவை எவையும் நடக்கவில்லை. 

Image result for priyanka gandhi

2014 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரசில் பிரியங்கா காந்தியின் தேவை அதிகமானது எனக் கூற வேண்டும். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற தோல்விகள் அந்தத் தேவையை அதிகரிக்கவே செய்தது. குறிப்பாக உ.பி.யில் ஏற்பட்ட தோல்வி, பாஜகவிடம் பல இடங்களை பறிகொடுத்த பரிதாபம் எல்லாம் சேர்த்து பிரியங்காவை கட்சிக்குள் கொண்டு வந்தே ஆக வேண்டும் கோரிக்கைக்கு வலு சேர்த்தது. ஆனால் தலைமை எந்த முடிவையும் எடுக்கவில்லை. சோனியாவும் ராகுலும் பரப்புரையில் மும்முரமாக இருந்தால், நான் என் குழந்தைக்கு கேக் செய்யும் வேலையை பார்க்கும் அம்மாவாக மட்டுமே இருப்பேன் என்றார் பிரியங்கா. 

Related image

தீவிர அரசியலை தவிர்த்தே வந்த பிரியங்காவை , திடீரென பொதுச்செயலாளராக நியமித்து பொறுப்பை கொடுக்க காரணம் என்ன ? அதற்கான அவசியம் என்ன என்ற கேள்விகள் பலருக்கும் எழுகிறது. ஆனால் உ.பி. மக்களுக்கு அந்த அவசியம் புரியாமல் இல்லை எனக் கூறலாம். 47 வயதான பிரியங்கா, பார்ப்பதற்கும், பழகுவதற்கும் , நடவடிக்கைகளிலும் இந்திரா காந்தி போன்றே உள்ளார் என்பது உத்திரபிரதேச மாநில மக்களின் எண்ணம். இந்திராவின் அதிரடியை பிரியங்காவிடம் பார்க்க முடிகிறது என பலரும் கூறுவார்கள். அதோடு 2017-ல் அகிலேஷ் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைக்க பிரியங்கா முக்கிய பங்காற்றினார். 

Related image

மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ள சூழலில், காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது. சரியாக கூட்டணி அமையாமல் போனால், பாஜகவுக்கு அது சாதகமாக அமைந்து விடாமல் தடுக்க பிரியங்கா பயன்படுவார் என காங்கிரஸ் நம்புகிறது. அதோடு காங்கிரஸ் வாக்குகளை தாண்டி பிரியாங்காவுக்கு கிழக்கு உ.பி.யில் செல்வாக்கு இருப்பதாகவும் , முக்கிய இடங்களை கைப்பற்றவும் , மற்றவர்களுக்கு பலமான போட்டியை கொடுக்கவும் அவரின் தீவிர அரசியல் பிரவேசம் உதவலாம் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. 

Image result for priyanka gandhi and akhilesh

இவற்றையெல்லாம் தாண்டி ராகுலுக்கு அடுத்த நிலையில் செயல்பட, அவரது நம்பிக்கைகுரிய ஒரு தலைவர் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது. மீண்டும் மோடியே ஆட்சிக்கு வருவார் என்ற கோஷம் தொடர்ந்து ஒலிக்கும் நிலையில் வலுவான கூட்டணியோடு, பலரையும் ஒருங்கிணைக்க பிரியங்காவால் முடியும் என்ற நிலையும் உள்ளது. மீண்டும் ஒரு வாரிசு அரசியலில் பிரவேசிக்கிறார் என்ற பொதுவான கருத்தை தாண்டி, பிரியங்கா மீது வேறு எந்தக் குற்றச்சாட்டையும் எதிர்க்கட்சிகளால் வைக்க முடியாது. இதனால் தேர்தல் நெருங்கும் நிலையில் பிரியங்காவுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்படலாம் என்றும் உ.பி.யில் அவர் போட்டியிட வாய்ப்பு தரப்படும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close