[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொதுவிடுமுறை நாட்கள் பட்டியல் வெளியீடு - ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என மொத்தம் 23 நாட்களுக்கு பொதுவிடுமுறை
  • BREAKING-NEWS திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது ராஜன் - பதில் கொடுக்கும் எஸ்.ஆர்.சேகர்

special-article-about-raghuram-rajan-s-speech-about-gst

ரகுராம் ராஜனின்  பெர்க்லி பல்கலைகழகம் உரை இந்திய ஊடகங்ககளுக்கு வெறும் வாயில் அவல். எப்போதும் போல செலக்டிவ் ஆக பிரசுரிப்பது அவர்களின் கலை. முழுவதும் படித்தால், புத்திமதி சொல்வது எளிது, செயலாக்கம் செய்வது கடினம் என்பது புரியும். ஒவ்வொன்றாக ஆக பார்க்கலாம். 

முதலில் ஜி.எஸ்.டியும் பணமதிப்பிழப்பும் பொருளாதார வளர்ச்சியை பின் தங்க வைத்து விட்டது. என்று பேசி இருக்கிறார் ரகுராம் ராஜன். இதில் 50% உண்மை என்ன அது ? பணமதிப்பழப்பு ஒரு கருப்புப் பண ஒழிப்பு சீர்திருத்தம். சீர்திருத்தங்கள் எந்த நாட்டில் எந்த காலத்தில் உடனடியாக பலன் தந்தது ? சொல்வீர்களா. மோடியோ, பாஜகவோ உடனடி பலன் தரும் என்று சொல்லவில்லை. 
ஆனால் உடனடியாக தந்த பலன் ஒன்று நாட்டில் புழங்கிய பணம் அத்தனையும் வங்கிக்கணக்கில் வந்தது, இரண்டாவது அன்று வரை இருந்த கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் புதிதாக "நாம்" உருவாக்கிய கருப்புப் பணம் தவிர. 

வரி வசூல் உயர்ந்தது. நக்சலிசம் ஒடுக்கப்பட்டது. கள்ள நோட்டு ஒழிந்தது. பயங்கரவாதி ஆட்டம் அடங்கியது இதெல்லாம் கொசுறு சாதனைகள். இன்னும் பணமதிப்பிழப்பினால் நீண்ட கால பலன்கள் என்ன என்பதை காலம் சொல்லும். ஏராளமான நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி, உலகப் பொருளாதார இறங்கு முகத்திலும், சீன, அமெரிக்க GDP இறங்கு முகத்தில் இருந்த போதும்  இந்தியா  GDP வீழ்ச்சியடையாமல் அதே இடத்தை தக்கவைத்தது சாதனை அல்லவா?

இந்த சீர்திருத்தங்கள் தானே ease of doing Business உலகத் தர வரிசையில் நம்மை 100 லிருந்து 77 என 23 இடங்கள் உயர்த்தியது. இந்த சீர்திருத்தம் தானே உலகில் பொருளாதார வளர்ச்சியில் பிரான்சை பின்னுக்குத் தள்ளி 6 ஆவது இடத்துக்கு வந்தது சாதனையாகும். சரி போகட்டும். ஜி.எஸ்.டிக்கு வருவோம். இந்த வரி சீர்திருத்தம் செய்ய சட்டம் கொண்டு வரவே எத்தனை ஆண்டுகள் ஆனது ? இதை கொண்டு வந்த காங்கிரசே எவ்வளவு எதிர்த்தது? எத்தனை வரிகள் ஒழிக்கப்பட்டு இன்று ஒரே வரி ஆனது? எத்தனை முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூடி வரிகளை குறைத்தது? எவ்வளவு சிரமங்கள் - எதிர்ப்புகள் ? - ஆனால் இன்று எவ்வளவு நற்பலன்கள்!

ரகுராம்ராஜன் இந்த குறுகிய கால பிரச்சனயை தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் அவர் பங்குக்கு  3 சீர்திருத்தங்களை சொல்லியிருக்கிறார். அது உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி உயர, வங்கிகள் படுத்தும் பாடை சுத்தம் செய்வது. என்பன அவற்றை வரவேற்கிறேன். ஆனால் வங்கி சுத்தம் ஏற்கெனவே தொடங்கி விட்டது. இன்சால்வன்சி, பேங்க்ரப்ஸி சட்டம் மூலம் வங்கியை ஏமாற்றுவோர் சொத்து கையகப்படுத்தப்பட்டு வருகிறது.  வசூல் தெளிவாக உயர்ந்து வருகிறது இதை நாம் தினசரி செய்திகளில் அறிந்து வருகிறோம். இன்னும் வங்கி சுத்தம் தொடர்வதாலேயே சிறுகுறு தொழில்களுக்கான 59 நிமிடத்தில் புதிய கடன் வசதி அறிவிப்பை கடந்த வாரம் பிரதமர் செய்திருக்கிறார். 

முத்ரா கடனில் தகுதியான ஏழைகளுக்கு கடன் தராமல் சாக்கு போக்கு சொல்லி வரும் வங்கிகளை கிடுக்கிப் பிடிக்குள் கொண்டு வரவே டிஜிட்டல் ஆன்லைனில் தகுதியானவர்கள் இடைத்தரகர் இல்லாமல், கமிஷன் இல்லாமல் நேரடியாக கடன் பெறுவதே இதன் நோக்கம். இது வங்கி சீர்திருத்தம் இல்லையா?

மின் உற்பத்தியில் மோடி அரசின் சாதனை இதுவரை இந்தியா பார்த்திராத ஒன்று. 1000 நாட்களுக்குள் 18000 மின் வசதி இல்லா கிராமம் மின்வசதி பெற்றது.தமிழகம் மாதிரி மாநிலம் நேஷனல் மின் கிரிட்டில் இணைக்கப்பட்டு, நம் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் சீர்திருத்தம் தொடர்கிறது .

புதிய உள் கட்டமைப்பு பணிகள் ஏற்கெனவே தொடங்கி முதல் கட்டமாக நாடு முழுதும் சாலை, நீர் வழி, ஆகாய வழி போக்குவரத்து கட்டமைப்பு பணிகள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. இவை ரகுராம்ராஜன் சொல்வதற்கு முன்பே தொடங்கியது. அது சரி அவர் சொன்ன அதிகார குவியல் மத்திய அரசில் ஒரே இடத்தில் இருக்கிறது என்றாரே அது சரியா? இதுநாள் வரை 67 ஆண்டுகள் காங் ஆண்ட போது யாரிடம் இருந்தது அதிகாரம்? 2004 - 14 UPA ஆண்ட போது பிரதமரிடம் இடம் இருக்க வேண்டிய அதிகாரம் சோனியாவிடம் மட்டுமே இருந்ததே யார் அவர் ? அப்போது ராஜன் கவர்னராக இருந்தார். என்பது என் நினைவு.

NPA கூட அவர் கவர்னராக இருந்த UPA 2 காலத்தில் மானாவாரியாக கொடுத்த கடனின் விளைவுதான் என்பது இப்போது தெரிகிறது. மத்திய அரசின் ஆட்சியில் அதிகாரம் பிரதமரிடம்தானே  இருக்க முடியும்? வேறு யாரிடம் இருக்க வேண்டும் எதிர்பார்க்கிறார் ராஜன். எல்லாம் சரியாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது ராஜன்.

வம்பிழுத்து விவகாரம் செய்ய துடிக்கும் பத்திரிக்கை சிலவற்றுக்கு வேண்டுமானால் ராஜனின் பேச்சில் சில வரிகள் உதவலாம் .  மற்றபடி இந்த செய்தி ஒரு நாள் கூத்து. அவ்வளவுதான். 

- எஸ்.ஆர்.சேகர்  (மாநிலப் பொருளாளர், பாஜக)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close