[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.56 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.43 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்தார் ராஜபக்ச; அவருடன் முன்னாள் எம்.பி.க்கள் 50 பேரும் இணைந்துள்ளனர்

ரேஷன் பொருட்களை விட்டுக்கொடுங்கள்..! - தேனி ஆட்சியர் செயல் சரியா?

theni-district-collector-said-government-employees-and-rich-people-need-to-give-their-ration

ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் அவற்றை விட்டுகொடுக்க வேண்டும் என தேனி ஆட்சியர் வலியுறுத்தி வருவது சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கேஸ் மானியம் தேவைப்படாதவர்கள் அதனை விட்டுக்கொடுக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அதன்படி, லட்சக்கணக்கானோர் தங்கள் மானியங்களை விட்டுக்கொடுத்தனர். இதேபாணியில் ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள்
அதனை விட்டுக்கொடுக்க வேண்டும் தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் வலியுறுத்தி வருகிறார். முதற்கட்டமாக அவர்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

அதில் ரேஷன் பொருட்கள் மானிய விலையில் வேண்டாம் எனும் ஆசிரியர்கள், அதற்கான விருப்பப்படிவத்தை பூர்த்தி செய்து
அனுப்புமாறு கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தான் பங்கேற்கும் மற்றும் நடத்தும் கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகளிடமும் மானிய
விலையில் வாங்கும் ரேஷன் பொருட்களை விட்டுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதுவரை சுமார் 150க்கும் மேற்பட்டோர்
மானியத்தில் வழங்கப்படும் ரேஷன் பொருட்கள் வேண்டாம் எனக்கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு பெரும்
தொகை சேமிப்பாகும் என்று கூறி, ஆட்சியர் இதனை செய்து வருகிறார். அத்துடன் முறைகேடாக கடத்தப்படும் ரேஷன் பொருட்களையும்
தடுக்க முடியும் என கூறிவருகிறார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சிலர் எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர். 

அந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், ரேஷன் பொருட்களை தாமே முன்வந்து
வேண்டாம் என கூற மக்களை ஊக்குவிக்கும் தேனி மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆட்சியரின்
வற்புறுத்தலால் பலர் ரேஷன் பொருட்கள் வேண்டாம் என எழுதிக் கொடுத்திருப்பதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். அவரது இந்த
செயல் சட்டவிரோதமானது என கூறியுள்ள திருமாவளவன், அதனை தடுத்து நிறுத்த அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசோ, முதலமைச்சரோ இப்படி எந்த அறிவிப்பையும் செய்யாத நிலையில், தனது விருப்பத்திற்கு மாவட்ட ஆட்சியர்
செயல்படுவது ஏன்? என்பது தெரியவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவரது இந்த நடவடிக்கையை தடுக்காவிட்டால்,
இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் இருப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு, மற்ற மாவட்ட ஆட்சியர்களும் அதைப் பின்பற்றக்கூடும் என
தெரிவித்துள்ளார்.

ஆட்சியரின் செயலுக்கு ஆதரவு தெரிவிப்போர்களில் ஒருவராக புதிய தலைமுறை இணையதளத்திடம் பேசிய அரசியல் விமர்சகர்
ராமசுப்ரமணியம் “தேனி மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை முற்றிலும் சரியானது. அரசு ஆசிரியர்களோ அல்லது ஊழியர்களோ ரேஷன்
பொருட்களை மானியத்தில் வாங்கும் அளவிற்கு பொருளாதார நிலை நலிவடைந்து இல்லை. அவர்கள் தாங்களாகவே முன்வந்து மானிய
விலை ரேஷன் பொருட்களை விட்டுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு விட்டுக்கொடுப்பதன் மூலம் மேலம் ஏராளமான ஏழைகள் பல
பெறுவார்கள். இதுபோன்று தமிழகம் முழுவடும் உள்ள வசதி படைத்தவர்களும் தங்கள் மானிய விலை ரேஷன் பொருட்களை
விட்டுக்கொடுத்தால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் பலன் பெறமுடியும். இதற்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு அரசியல்
காரணமாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த திட்டம் மோடியின் கேஸ் மானியத்தை விட்டுக்கொடுக்கும் கோரிக்கையின் வழியில்
வருகிறது எனக்கூறினால், அது வரவேற்கத்தக்க ஒன்று. அந்த முறையை பின்பற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. அதனால் நாட்டில்
உள்ள கோடிக்கானக்கானோர் பயன் அடைவார்கள்” என்று கூறினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close