[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஆண்களிடமும் காணப்படும் அட்சய திருதியை நம்பிக்கை

akshaya-tritiya

அண்மையில் விலை ஏறியிருப்பதால், இந்த ஆண்டு அட்சய திருதியை, தங்க விற்பனை எப்படியிருக்குமோ என்ற கேள்வி நகை வணிகர்களிடம் பரவலாக இருக்கிறது. கடந்த ஆண்டுகளில், அந்தந்த ஊரைப் பொறுத்து, இது, அந்த ஒரு நாளில் மட்டும் 3 முதல் 5 மடங்கு வரை விற்பனை அதிகரிக்கும் என்கின்றன தகவல்கள்.

அட்சய திருதியை பிரபலமானதும், அதன் வீச்சு அதிகரித்துள்ளதும், அண்மைக்காலமாகத்தான் என்பதை நகை வணிகர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். மிகச் சரியாகச் சொல்வதானால், 1996 - 97 ம் ஆண்டு வாக்கில்தான். இது தொடங்கியது என்பது, அவர்களே தரும் வாக்குமூலம்.

பொதுவாக அட்சய திருதியை நாளில், அன்று தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவது பெண்கள்தான் என்றாலும், ஆண்களிலும் இந்த நம்பிக்கை கொண்டவர்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

மறுபுறம், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க உள்ள மாற்று வழிகள், தங்களை பாதிக்காது என நகை வணிகர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, வங்கிகள் தங்க நாணயம் விற்பது நிறுத்தப்பட்டு விட்டது என்றும், கமாடிட்டி சந்தை, கோல்ட் ஈடிஎஃப், போன்றவை மூலம் தங்கம் வாங்குவது, தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்புடையதல்ல என்றும் சொல்கிறார்கள்.

தேர்தல் கமிஷனின் தீவிரம், இந்த ஆண்டு நகை வாங்க விரும்புவோரை பாதிக்கும் எனச் சொல்லப்பட்டாலும், வங்கியில் இருந்து பணம் எடுத்த ரசீது எடுத்துச் செல்பவர்களுக்கு பிரச்னை இருக்காது.

அதனால், பொதுமக்களின் நகைத் திருநாளுக்கு, அதன் கொண்டாட்டத்துக்கு சட்டமன்றத் தேர்தல் குறுக்கே நிற்காது என நம்பலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close