[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
  • BREAKING-NEWS ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
  • BREAKING-NEWS 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி - மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
  • BREAKING-NEWS மோடிதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வருவார் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

உதகையைச் சுற்றிப்பார்க்கலாம் வாங்க......

summer-tourist-place-ooty

கோடையை குளுமையுடன் கழிக்க சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய முதல் தேர்வு உதகை. சுற்றுலாவை உற்சாகத்துடன் கழிக்க விரும்புவோர் சுற்றிப்பார்க்க இங்கு பல இடங்கள் இருக்கின்றன. குளுமையான மலைவாசஸ்தலம் என்பதோடு, பசுமையோடு பொழுதை கழிக்க ஏற்ற இ‌டம் உதகை.

உதகை அரசு தாவரவியல் பூங்கா

22 ஹெக்டெர் பரப்பிலான உதகை தாவரவிய‌ல் பூங்காவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தாவர இனங்களும், 150க்கும் மேற்பட்ட வகை வெளிநாட்டு மரங்களும், அலங்கார செடிகளும், உள்ளன. பச்சைப்பசேல் புல்வெளி, இதனை ஒட்டி உள்ள கல்மரம், இத்தாலியன் பூங்கா, புல்வெளி, குளங்கள், கண்ணாடி மாளிகை, பெரணி இல்லம். விதைக் கூடம் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமி‌ன்றி, தாவரவியல் மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உதகை ரோஜா கண்காட்சி

உதகை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரோஜா பூங்கா, பயணிகளின் மனம் கவரும் இடங்களில் முக்கியமானது. தற்போது 3 ஆயிரத்து 600 ரகங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் இங்கிருக்கின்றன. மே 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் 16 ஆவது ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதால் அதனையொட்டி செல்பவர் பலவித ரோஜாக்களை கண்டுரசிக்கலாம்.

உதகை படகு இல்லம்

சுற்றுலாத்துறைக்கு கீழ் இயங்கும் படகு இல்லம், 4 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு தலங்கள், மினி ரயில், குதிரை சவாரி, படகு இல்லத்தின் மறுகரையில் தேன் நிலவு படகு இல்லமும் உள்ளன. குழந்தைகளை கவரும் TOY TRAIN இங்கு இயக்கப்படுகிறது.

தொட்ட பெட்டா

தென்னிந்தியாவின் உயரமான சிகரமான தொட்டபெட்டா ஊட்டியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று. இந்த மலைச்சிகரத்தில் இருந்து. பார்த்தால், உதகை நகரம், குன்னூர், மைசூர் மற்றும் முதுமலை வனப்பகுதி போன்றவற்றை தொலைநோக்கி மூலம் ரசிக்கலாம்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close