[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

இதையெல்லாம் செய்யாதீங்க; செல்போன் வெடிக்கும்: உஷார்

the-science-behind-exploding-phone-batteries

தற்போதைய காலகட்டத்தில் செல்போன்கள் இல்லாதவர்களை கண்டால் அதிர்ச்சி அடைவோம். ஏனெனில் சிட்டி முதல் பட்டி தொட்டி வரை செல்போன்கள் ஆதிக்கம் செய்கிறது. இளைஞர்களை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி வானை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன. 

அதேபோன்று செல்போன் வெடிக்கும் சம்பவங்களும் ஓயாமல் அரங்கேறுகின்றன. ஓட்டலில் சாப்பிடும் போது செல்போன் வெடித்தது, பைக் ஓட்டும் போது செல்போன் வெடித்தது, தூங்கும் போது செல்போன் வெடித்தது இவ்வாறு விதவிதமாக செல்போன்கள் வெடிப்பதை அவ்வப்போது செய்திகளில் காண முடிகிறது. சில நேரங்களில் செல்போன் வெடித்து உயிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் செல்போன்கள் மீது ஒரு விதமான அச்சம் மக்களுக்குள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் எந்நேரமும் செல்போன்களுடன் இருப்பவர்கள் அந்த அச்சம் சற்று அதிகமாகவே உள்ளது.

இந்தியாவில் நாள்தோறும் சுமார் 20க்கும் மேற்பட்ட செல்போன்கள் வெடித்து சிதறுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதில் பெரும்பாலானவை ஸ்மார்ட்போன்கள் தான். செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டே, அழைப்புகளை பேசுவதால் வெடிக்கிறது என்ற கருத்து அனைவரது மத்தியிலும் பொதுவாக காணப்படுகிறது. அது உண்மைதான் என்றாலும், பின்னர் எப்படி பைக்கில் செல்லும் போதோ அல்லது வேறு சில இடங்களிலோ செல்போன்கள் வெடிக்கின்றன? என்ற கேள்வியும் அனைவரது மத்தியிலும் உள்ளது. 

பேட்டரி திறன் :

செல்போன்களில் வெடிக்கக்கூடிய ஒரே சாதனம் பேட்டரி தான். அது வெடிக்கும் போது தான் செல்போன் மொத்தமாக வெடித்து சிதறுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? உங்கள் போனின் சார்ஜரைக் கொண்டு ஜார்ச் போடாமல், பிறரின் செல்போன் சார்ஜர்களை பயன்படுத்துவதாகும். அது எப்படி எல்லாமே ஒரே பின் கொண்ட சார்ஜர் தானே என நினைக்கலாம். ஆனால் பேட்டரின் திறன் அனைத்து போன்களிலும் ஒன்று இல்லையே. ஒவ்வொரு போனிலும் பேட்டரி திறன் மாறுபடுகின்றன. 

சரியான சார்ஜர் :

அந்தத் திறனுக்கு ஏற்றவாறு வோல்ட் மதிப்பு கொண்ட சார்ஜ்களே, போனுடன் வழங்கப்படுகின்றன. அந்த ஒரிஜினல் சார்ஜர்களை பயன்படுத்தும் போது, பேட்டரின் வெப்பநிலையில் தாக்கம் ஏற்படுவதில்லை. ஆனால் குறைந்த திறன் கொண்ட பேட்டரிக்கு, அதிக வோல்ட் கொண்ட சார்ஜரை பயன்படுத்து போது அந்த பேட்டரி பருமன் அடைகிறது. அதன் திறனில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதனால் உங்கள் போனில் நீண்ட நேரம் சார்ஜ் நிக்காத நிலை உண்டாகலாம், பின்னர் இந்த நிலையற்ற தன்மையால் ஒரு நாள் உங்கள் போன் எந்நேரத்திலும் வெடித்து சிதறும். அதனால் இனிமேல் உங்கள் போனுக்கு சரியான சார்ஜரை பயன்படுத்துங்கள். பேட்டரிகள் வெடிப்பதை தவிருங்கள்.

சார்ஜ் போட்டு பேசுவது :

செல்போன்கள் வெடிக்கும் சம்பவம் என்றாலே, பெரும்பாலானோர் அறிந்தது சார்ஜ் போட்டு பேசினால் வெடிக்கும் என்பது தான். அது ஏன்? சார்ஜ் போட்டு அழைப்புகளை பேசுவதால், உங்கள் செல்போனிற்கு அதிகமான சிக்னல் தேவைப்படுகிறது. அதனால் சார்ஜர் மூலம் பாயும் வோல்ட் அளவிலும் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது. இதன்மூலம் பேட்டரின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்று, திடீரென்று வெடித்து சிதறும். எனவே சார்ஜ் போட்டு பேசுவதை தவிருங்கள்.

இண்டர்நெட்டை துண்டிக்காமல் பேசுவது :

சிலர் செல்போனில் இண்டர்நெட் பயன்படுத்த துவங்கிவிட்டால் சார்ஜ் குறையும் வரை ஏதாவது செய்து கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து மணிக்கணக்கில் இண்டர்நெட் பயன்படுத்திக்கொண்டே இருப்பர். வீடியோ, சமூக வலைத்தளங்கள் என ஓய்வில்லாமல் அந்த போன் இயங்கிக்கொண்டிருக்கும். இதற்கிடையே பல அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தி இருப்போம். அதுவும் பின்புறத்தில் இயங்கிக்கொண்டிருக்கும். 

அந்த நேரத்தில் வரும் அழைப்புகளை உடனே அட்டென் செய்வதால், வெப்பநிலையின் தூண்டப்பட்டு செல்போன் வெடிக்கும். எனவே இண்டர்நெட் பயன்படுத்தும் போது அழைப்புகள் வந்தால், சிறிது நேரம் கழித்து பேசவும். ஏனென்றால் ரிங் அடித்த சிறிது நேரம் கழித்து இண்டர்நெட் அதுவாக துண்டிக்கப்படும். மேலும் தினம் ஒருமுறை உங்கள் போனை ரீ ஸார்ட் செய்யுங்கள், மாதம் ஒரு முறை ரீசெட் செய்யுங்கள். செல்போன் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு தேவை ஆகிவிட்டது என்றாலும், நமது உயிர் அதனுடன் சிறிதும் ஒப்பிட முடியாத அளவிற்கு முக்கியம் என்பதை உணர வேண்டும். அதற்கேற்ப பாதுகாப்பான முறையில் செல்போன்களை பயன்படுத்த வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close